ADDED : ஜன 22, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் மாவட்ட ஜவான் நல சங்க கட்டட திறப்பு விழா, ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
இதில் சங்க கட்டடத்தை சங்கத்தலைவர் முத்துசாமி திறந்து வைத்தார். டாக்டர் மகேஸ்வரி, விருதுநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன் குத்து விளக்கிகேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
அலுவலக கட்டட கல்வெட்டு கர்னல் ராகேஷ் குமார் திறந்து வைத்தும், தேசியக்கொடியை சீனிவாசன் ஏற்றினார்.
ஒய்வு ராணுவ வீரர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடந்தது. இதில் தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூரைச் சேர்ந்த நல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.