ADDED : அக் 18, 2024 04:45 AM
காரியாபட்டி: ஆவியூரில் புதிய ஊராட்சி செயலக கட்டடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
காரியாபட்டி ஆவியூரில் ரூ. 42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிய ஊராட்சி செயலக கட்டட திறப்பு விழா, கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பேசியதாவது:
மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்து, நிறைவேற்றி வருகிறது. நலத்திட்ட உதவிகள் எளிதாக பெற்று பயன்பெறவும், அரசு அலுவலர்கள் சிரமம் இன்றி பணிபுரியவும் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
ஒன்றிய தலைவர் முத்துமாரி,, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஊராட்சி தலைவர் தனலட்சுமி, பி.டி.ஓ.,கள் வாசுகி, உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.