/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடரும் மழையால் பாலங்கள் கட்டுமான பணிகள் பாதிப்பு; திருமங்கலம்-ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில்

ADDED : ஜன 13, 2024 04:42 AM

ஸ்ரீவில்லிபுத்தூர், : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழி சாலையில் பாலங்கள் கட்டுமான பணி, மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழி சாலையில் ரோடுகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வழித்தடத்தில் உள்ள கால்வாய்கள், நீர்வரத்து ஓடைகளில் பாலங்கள் கட்டும் பணி நடந்து வந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நகர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கன்மாய்கள் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வத்திராயிருப்பில் பெரியாறு மற்றும் கோவிலாறு கோவில் அணைகள், கண்மாய்கள், சதுரகிரி நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் மூவரை வென்றான் அர்ச்சுனா நதியில் மழைநீர் பெருகெடுத்து செல்கிறது. இதுபோல் அழகாபுரிலிருந்து கிருஷ்ணன் கோவில் வரையில் உள்ள சிறிய நீர் வரத்து ஓடைகள், கால்வாய்களில் தண்ணீர் சென்று கொண்டே உள்ளது.
இதனால் இப்பகுதியில் பாலங்கள் கட்ட தோண்ட முடியாமலும், கட்டுமான பணிகள் செய்ய முடியாமலும் ஊழியர்கள் திணறி வருகின்றனர். பல இடங்களில் பள்ளம் தோண்டினால் தண்ணீர் பொங்கி வருகிறது. இதனால் கம்பி கட்டும் பணிகள் செய்ய முடியவில்லை.
தற்போது பூமி நன்றாக குளிர்ந்து உள்ள நிலையில் ஓரளவிற்கு வெயிலின் தாக்கம் வந்தால் மட்டுமே பாலங்கள் கட்டுமான பணி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலையில் பாலங்கள் அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.