ADDED : ஆக 13, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி; சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர் வீடு, அலுவலகங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நேற்று 2 வது நாளாக தொடர்ந்தது.
சிவகாசியில் உள்ள இரு பட்டாசு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், சிவகாசியில் இருந்து வட மாநிலங்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்லும் இரு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன் தினம் காலை 10:30 மணிக்கு சோதனையை துவக்கினர். இரண்டாவது நாளாக நேற்று காலை 10:00 மணி முதல் சோதனை நடந்தது. டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் எவ்வளவு பட்டாசுகள் வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது, யாரிடமிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விபரங்களை ஆய்வு செய்தனர்.