/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயிலில் சிறுமிகளுக்கு தொல்லை; பூஜாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
/
கோயிலில் சிறுமிகளுக்கு தொல்லை; பூஜாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
கோயிலில் சிறுமிகளுக்கு தொல்லை; பூஜாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
கோயிலில் சிறுமிகளுக்கு தொல்லை; பூஜாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஆக 13, 2025 01:34 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கோயிலில் தினமும் விளக்கேற்ற வருமாறு அழைத்து, 2 சகோதரிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்த பூஜாரி மாரியப்பனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் 67. இவர் அப்பகுதியில் மல்லம்மாள் கோயிலில் பூஜாரியாக இருந்தார்.
2023ல் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 4 வயதுடைய இரு சகோதரிகளை, தினமும் விளக்கேற்ற வருமாறு அழைத்துள்ளார்.
அதன்படி 6 மாதங்களாக சிறுமிகள் கோயிலுக்கு சென்று வந்த நிலையில் அவர்களுக்கு அங்கு பூஜை அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் மாரியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் மாரியப்பனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.