ADDED : பிப் 16, 2025 06:37 AM
சாத்துார் : சாத்துாரில் லாட்டரி விற்பனை அதிகரித்து வருவதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.
சாத்துார் படந்தால்ஏழாயிரம்பண்ணை தாயில்பட்டி வெம்பக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் நாளுக்கு நாள் வெளி மாநில லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் ஏழை கூலி தொழிலாளர்களை குறி வைத்துலாட்டரி வியாபாரிகள் சீட்டுகளை விற்பனை செய்கின்றனர்.ஐம்பதாயிரம் ஒரு லட்சம் பணம் விழுந்ததாக தகவலை பரப்பி பலரையும் லாட்டரி வாங்கும் மோகத்தில் சிக்க வைக்கின்றனர். அலைபேசி வாயிலாகவும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. .போலீசார் அவ்வப்போது வழக்கு பதிந்த போதும் இந்த லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பட்டாசு ஆலை தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் கட்டட தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏமாந்து பணம் இழப்புக்கு ஆளாகி வருகின்றார்கள்.
எனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்ய வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.