/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் முயல்வேட்டை அதிகரிப்பு
/
மாவட்டத்தில் முயல்வேட்டை அதிகரிப்பு
ADDED : பிப் 15, 2024 04:42 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அறுவடை பணிகள் முடிந்து விளை நிலங்கள் தரிசாக காணப்படுவதால் முயல்களை வேட்டையாடுவது அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சோளம், மக்காச்சோளம், சிறுபயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் அதிக பரப்பில் பயிரிடப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து அறுவடை பணிகள் நிறைவடை ந்ததுள்ளன. இந்த பகுதிகளில் சாம்பல் நிற முயல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இவற்றை பிடிக்க வேட்டைகளுக்கென தனியாக நாய்களை பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். ஊரகப்பகுதிகளில் உள்ளவர்கள் முயல்களின் நடமாட்டத்தை நோட்டமிட்டு பகலில் நாய்களுடனும், இரவில் கண்ணி வைத்து பிடிக்கின்றனர். இவர்கள் இது போன்று இறைச்சிக்காக முயல்களை வேட்டையாடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஊரகப்பகுதிகளில் எவ்வித தொந்தரவும் இல்லாமல் முயல்வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நாய்களை வைத்து முயல் வேட்டையில் ஈடுபடும் போது ரத்த வாசனையை ருசி கண்ட நாய்கள் ரோட்டில் செல்லுபவர்களையும் கடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் முயல்வேட்டையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

