/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு
ADDED : செப் 25, 2024 03:19 AM
ஸ்ரீவில்லிபுத்தூர், : கோதை நகரான ஸ்ரீவில்லிபுத்தூர் போதை நகரமாக மாறுவதை தடுக்க கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
ஆன்மிக நகரான ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை மிகவும் அதிகளவில் அதிகரித்து கோதை நகரம் என்பது போதை நகரமாக மாறும் சூழல் ஏற்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக மக்களே வெளிப்படையாக பேசும் அளவிற்கு பஜார் வீதிகள், தெருக்களில் கஞ்சா விற்பனை நடந்தது.
இதனையடுத்து டி.எஸ்.பி. ராஜா தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு, தம்பி பட்டி, கூமாபட்டி, மம்சாபுரம், வன்னியம்பட்டி உட்பட அனைத்து கிராமங்களிலும் தனிப்படை போலீசார் எடுத்த நடவடிக்கையால் கடந்த சில நாட்களாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணன் கோவிலில் கல்லூரி மாணவர்கள் 4 பேர், ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்யா 39, வன்னியம்பட்டியில் வேலம்மாள் 59, கிருஷ்ணன் கோவிலில் கார்த்திக் ராஜா 23, மம்சாபுரத்தில் தாமரைக்கனி 34, உட்பட பலரும் கைது செய்யபட்டுள்ளனர்.