/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அய்யனார் கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு வழிபாட்டிற்கு தடை
/
அய்யனார் கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு வழிபாட்டிற்கு தடை
அய்யனார் கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு வழிபாட்டிற்கு தடை
அய்யனார் கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு வழிபாட்டிற்கு தடை
ADDED : டிச 05, 2025 06:44 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் கார்த்திகை இரண்டாவது தினத்தை முன்னிட்டு வழிபாட்டிற்காக பக்தர்கள் குவிந்தனர். நீர்வரத்து அதிகரித்ததால் மதியத்துக்கு மேல் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார அய்யனார் கோயில் கார்த்திகை 2வது நாளை முன்னிட்டு காலை முதல் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
இங்குள்ள ஆசிரமத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் ஆற்றில் நீர்வரத்து குறைந்த நேரத்தில் மறுபுறம் உள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றனர்.
மலையில் கனமழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மதியம் 2:00 மணிக்கு மேல் வழிபாட்டிற்கு செல்ல பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு தடை விதித்தனர்.
கோயிலில் இருந்து திரும்பியவர்களை வனத்துறையினருடன் சேர்ந்து ஊர்க்காவல் படையினர் ஆற்றை கடக்க உறவினர். இருப்பினும் கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி செயல்பட்டது பக்தர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியது. ஆயிர கணக்கில் கூடும் விழா காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

