/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அதிகரிப்புக்கு தாலுகாவிற்கு ஒரு போலீஸ் சப்-டிவிஷன் குழந்தை திருமணங்களை தடுக்க அவசியம்
/
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அதிகரிப்புக்கு தாலுகாவிற்கு ஒரு போலீஸ் சப்-டிவிஷன் குழந்தை திருமணங்களை தடுக்க அவசியம்
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அதிகரிப்புக்கு தாலுகாவிற்கு ஒரு போலீஸ் சப்-டிவிஷன் குழந்தை திருமணங்களை தடுக்க அவசியம்
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அதிகரிப்புக்கு தாலுகாவிற்கு ஒரு போலீஸ் சப்-டிவிஷன் குழந்தை திருமணங்களை தடுக்க அவசியம்
ADDED : ஆக 14, 2025 11:23 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தாலுகாவிற்கு ஒரு போலீஸ் சப்-டிவிஷன் என எண்ணிக்கை உயர்த்தி மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், வெம்பக்கோட்டை, திருச்சுழி, வத்திராயிருப்பு என மொத்தம் 10 தாலுகாக்கள் உள்ளது.
ஆனால் விருதுநகர், சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், திருச்சுழி என மொத்தம் 7 போலீஸ் சப்-டிவிஷன்கள் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு சப்-டிவிஷனிற்கும் டி.எஸ்.பி., பொறுப்பு அதிகாரியாக உள்ளார். இவற்றில் ஒரு போலீஸ் சப்-டிவிஷனிற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் மொத்தம் 7 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது.
தாலுகாக்கள் தேவைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்ட நிலையில் போலீஸ் சப்-டிவிஷன்கள் பல ஆண்டுகளாக அதிகரிக்கப்படாமல் இருப்பதால் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. இதனால் வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணங்கள், பாலியல் புகார்களுக்கு நீண்ட துாரம் புகார், வழக்கு விசாரணைக்காக பாதிக்கப்பட்டவர்கள் அலையும் நிலை தொடர்கிறது.
குழந்தை திருமணங்கள் முடிந்து கர்ப்பமாகி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வரும் போது ஆதார் கார்டில் உள்ள பிறந்தநாள் வைத்து குழந்தை திருமணம் நடந்திருப்பது கண்டறியப்படுகிறது. அதன் பின் கணவன், குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு பதியப்படுகிறது. இந்த வழக்குகளில் பெரும்பாலும் முன்கூட்டியே தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் இணைந்து எடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தாலுகாவிற்கு ஒரு போலீஸ் சப்-டிவிஷன் என விரிவுப்படுத்தி ஒரு தாலுகாவிற்கு ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேஷனை கொண்டு வர தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதன் மூலம் குழந்தை திருமணங்கள் நடப்பது பெரிய அளவில் தடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.