ADDED : அக் 19, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ராஜபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த குடி யிருப்பின் பல்வேறு தெருக்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். பலர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர்.
இந்நிலையில் இப் பகுதியில் உள்ள நாய்கள், குழந்தைகள், முதியவர்கள் டூவீலரில் வருபவர்களை விரட்டி வருவதால் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு சிலரை நாய்கள் கடித்து உள்ளது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.