/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மம்சாபுரத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
/
மம்சாபுரத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
ADDED : நவ 07, 2025 03:31 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பாலும், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப் படுவதாலும் பஸ்கள் இயக்க முடியாமல் டிரைவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பேரூராட்சி பகுதியான இங்கு ஆண்டுதோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பொழுது ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி போன்ற நகரங்களுக்கு அதிகளவில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மம்சா புரம் ஐயப்பன் கோயிலில் இருந்து பஜார் வீதி வழியாக ஊரின் வடக்கு எல்லை வரையிலும் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதி கரித்துள்ளது. பல ஆண்டு களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
மேலும் டூவீலர்கள், டிராக்டர்கள், வேன்கள் தாறுமாறாக நிறுத்தப் படுவதால் எதிரும் புதிருமாக இரு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்கள் எளிதாக வரமுடியாத நிலை உள்ளது.
எனவே, நகரில் முழு அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி எளிதில் பஸ்கள் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என மம்சாபுரம் மக்களும், டிரைவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

