/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் இடமாற்றம் செய்யப்படும்
/
கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் இடமாற்றம் செய்யப்படும்
கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் இடமாற்றம் செய்யப்படும்
கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் இடமாற்றம் செய்யப்படும்
ADDED : நவ 07, 2025 03:31 AM
அருப்புக்கோட்டை: ''அருப்புக்கோட்டையில் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் விரைவில் இடம் மாற்றம் செய்யப்படும்,'' என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
அருப்புக்கோட்டையில் மதுரை ரோட்டில் கோயில்கள் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் மக்கள், மாணவர்கள், பெண் பக்தர்கள் வேதனைக்கு உள்ளாவதாக செய்தி நேற்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்தது.
செய்தியை படித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உடன் நமது நிருபரை அலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதாவது:
அருப்புக்கோட்டை கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடை விரைவில் இட மாற்றம் செய்யப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளேன். பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் கடை வேறு இடத்திற்கு விரைவில் மாற்றம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.