/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திட்ட பணி ஒப்பந்தங்களில் அரசியல்வாதிகளோடு அதிகாரிகளின் உறவினர்கள் தலையீடும் அதிகரிப்பு
/
திட்ட பணி ஒப்பந்தங்களில் அரசியல்வாதிகளோடு அதிகாரிகளின் உறவினர்கள் தலையீடும் அதிகரிப்பு
திட்ட பணி ஒப்பந்தங்களில் அரசியல்வாதிகளோடு அதிகாரிகளின் உறவினர்கள் தலையீடும் அதிகரிப்பு
திட்ட பணி ஒப்பந்தங்களில் அரசியல்வாதிகளோடு அதிகாரிகளின் உறவினர்கள் தலையீடும் அதிகரிப்பு
ADDED : ஆக 28, 2024 05:58 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய திட்ட பணி ஒப்பந்தங்களில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் ஒப்பந்தம் எடுப்பது போல், அதிகாரிகளின் நெருங்கிய உறவினர்களும் டெண்டர் எடுக்கின்றனர். எடுப்பதோடு மட்டுமின்றி அதிகார துஷ்பிரயோகம் செய்து பணிகளை தரமின்றி செய்கின்றனர்.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்ட பணி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதை தரமாகவும், நல்ல முறையில் செய்வதற்கே அதிகாரிகள் பணிகள் நடக்கும் போது கள ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் ஒன்றிய அளவில் நடக்கும் பல்வேறு திட்ட பணிகளில் கள ஆய்வு குறைந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஒரு சில அதிகாரிகள் தங்கள் உறவினர்களை டெண்டர் எடுக்க வைத்து அவர்கள் மூலம் பணியை முடிக்க வைக்கின்றனர்.
அதிக லாபம் பார்ப்பதற்காக தரமின்றி செய்யப்படும் பணிகளை கள ஆய்வு செய்ய செல்லும் அலுவலர்களும் வேறு பணிகளுக்கு மடைமாற்றப்படும் சூழல் உள்ளது. இதனால் கள ஆய்வு குறைந்து வருகிறது.
அரசியல்வாதிகளை போல் அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டரில் தங்கள் உறவினர்கள் தலையிட செய்வது துஷ்பிரயோக நடவடிக்கை.
இது போன்ற அதிகாரிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் மாவட்ட நிர்வாகம் நல்ல நோக்குடன் செய்யும் திட்டங்கள் மக்களிடம் சென்றடையும்.
இன்னொரு பக்கம் அரசியல்வாதிகள், ஒன்றிய தலைவர்களின் உறவினர்கள் டெண்டர் எடுத்து கொண்டு பெயருக்கு பணியை முடித்து விட்டு பில் வாங்கி செல்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் தொடர் கள ஆய்வு செய்வதையும், அதிகாரிகள் தங்கள் உறவினர்கள் மூலம் டெண்டர் விடுவதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதையும், பெயருக்கு தரமின்றி செய்யும் பணிகளை கண்டறிந்து ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

