/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு ஓரங்களின் மின்கம்பங்களில் பிளஸ்க் பேனர்கள் வைப்பது அதிகரிப்பு
/
ரோடு ஓரங்களின் மின்கம்பங்களில் பிளஸ்க் பேனர்கள் வைப்பது அதிகரிப்பு
ரோடு ஓரங்களின் மின்கம்பங்களில் பிளஸ்க் பேனர்கள் வைப்பது அதிகரிப்பு
ரோடு ஓரங்களின் மின்கம்பங்களில் பிளஸ்க் பேனர்கள் வைப்பது அதிகரிப்பு
ADDED : ஆக 04, 2025 03:49 AM

விருதுநகர்: மாநில நெடுஞ்சாலைகளில் ரோடு ஓரத்தில் வீடுகளுக்கு மின்சாரம் வினியோகிக்க வைக்கப்பட்ட மின் கம்பங்களில் கயிறு கட்டி தனியாக கம்பு ஊன்றி பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மின்கம்பத்தில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
மாவட்டத்தில் முக்கிய பகுதிகளை இணைப்பதற்காக நகர், புறநகர், ஊரகப்பகுதிகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வீடுகள், கடைகள், சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்வதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள மின்கம்பங்களில் கயிறு கட்டி தனியாக கம்பு ஊன்றி விளம்பர பேனர்களை அமைக்கின்றனர். இதே போன்று திருமண நிகழ்ச்சிகள், கட்சி ஆலோசனை கூட்டங்கள், முக்கியஸ்தர்கள் வருகையின் போதும் மின்கம்பங்களில் இணைத்து கம்பு ஊன்றி விளம்பர பேனர்கள் கட்டும் கலாச்சாரமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வீடுகள், கடைகளுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் அவற்றை சரிசெய்ய மின்கம்பங்கள் மீது மின்வாரிய ஊழியர்கள் ஏறிச் சென்று பார்க்க முடிவதில்லை. மின்கம்பங்களில் பேனர்களை கட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று மின்கம்பங்களில் பிளக்ஸ் பேனர்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.