/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் போலீசார் நடவடிக்கை தேவை
/
விருதுநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் போலீசார் நடவடிக்கை தேவை
விருதுநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் போலீசார் நடவடிக்கை தேவை
விருதுநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் போலீசார் நடவடிக்கை தேவை
ADDED : நவ 21, 2024 04:03 AM
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, அருப்புக்கோட்டை முக்கு ரோடு, பாண்டியன் நகர் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து காரியாப்பட்டி, மல்லாங்கிணர், கல்குறிச்சி, அரசு மருத்துவமனை, பாண்டியன் நகர் செல்லும் பஸ்கள், வாகனங்கள், ஆம்புலன்கள் ரயில்வே பீடர் ரோட்டை கடந்து செல்கின்றனர்.
அதே போல சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் பாத்திமா நகர், ஆற்றுப்பாலத்தை கடந்து செல்கின்றனர். மேலும் அருப்புக்கோட்டை, பாலவநத்தம் செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை முக்கு ரோட்டை கடந்து செல்கின்றன. விருதுநகரில் இருந்து நகர், புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு செல்ல இவ்வழியாகவே செல்ல வேண்டியுள்ளது.
கனரக வாகனங்கள், கார், ஆட்டோ, டூவீலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இதனால் விருதுநகரில் இருந்து வெளியே செல்வது சிரமமான ஒன்றாக மாறிவிட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட வேண்டிய போலீசார் போதிய அளவில் இல்லை.
ஸ்டேஷன்களில் இருந்து பணிகளுக்கு வரும் போலீசார் பெரும்பாலும் போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபடுவதில்லை. மாறாக ரோட்டின் ஓரமாக நேரம் முடியும் வரை டூவீலரில் நின்று விட்டு செல்லும் நிலையே நீடிக்கிறது. அதிலும் ரயில்வே பீடர் ரோட்டில் ஏற்படும் நெரிசலை சரிசெய்யும் பணிகளுக்கு ஆட்கள் இருந்தும், இல்லாததை போலவே உள்ளது.

