/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் நகராட்சி அலுவலக ரோட்டில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
/
விருதுநகர் நகராட்சி அலுவலக ரோட்டில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் நகராட்சி அலுவலக ரோட்டில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் நகராட்சி அலுவலக ரோட்டில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
ADDED : அக் 21, 2024 04:33 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி அலுவலக ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலக ரோட்டில் உள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள், உணவகங்களுக்கு நகரின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இப்பகுதியில் உள்ள எந்த நிறுவனங்களுக்கும் தனியாக பார்க்கிங் வசதி கிடையாது. இவர்கள் ரோட்டை தங்கள் பார்க்கிங் பகுதியாக மாற்றியுள்ளனர். இதனால் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி செல்கின்றனர்.
இப்படி நிறுத்துவதால் மற்றவர்களும் தங்கள் பங்கிற்கு ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி ரோடு முழுவதும் வாகனங்களின் பார்க்கிங் பகுதியாக மாற்றி வருகின்றனர். சாத்துார், அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து வாகனங்களில் வருபவர்களுக்கு விருதுநகருக்குள் செல்ல ஏதுவான வழியாக நகராட்சி அலுவலக ரோடு இருப்பதால் அவர்களும் இவ்வழியாக செல்கின்றனர்.
இப்பகுதியில் செயற்கையான போக்குவரத்து நெரிசல் உண்டாக்கப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே நகராட்சி அலுவலக ரோட்டின் வாகன ஆக்கிரமிப்புகளை தடுத்து வாகனங்கள் தடையின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

