ADDED : ஜன 05, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட்சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு ரூ. ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பலவேசம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன் பேசினார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பில் மாவட்டக்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி பேசினார். திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.