ADDED : ஜூலை 26, 2011 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபட்டியில், முதுகுளத்தூர் தாலுகா கருமல், குமாரகுறிச்சி, மேலப்பனையூர், ராமலிங்கபுரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தொழில் நுட்ப சுற்றுலா நடந்தது.
நீர்வள, நிலவள திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகள் கலந்து கொண்டனர். ராமசாமிபட்டியில் அமைந்துள்ள காய்கறி பயிர்கள், கரும்பு மற்றும் மல்லிகை பயிர்கள் பயிரிட்டுள்ள நிலங்களை பார்வையிட்டனர். பரமக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர்கள் ஜெயசீனிவாஸ், மீனாட்சிசுந்தரம் சென்றனர். பயனாளிகளின் சந்தேகங்களுக்கு உதவி பேராசிரியர் செல்வி, இணை பேராசிரியர் பாபு விளக்கினர். இளநிலை ஆராய்ச்சியாளர் முத்துகருப்பன் நன்றி கூறினார்.