/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பில் கந்த சஷ்டி விழா துவக்கம்
/
வத்திராயிருப்பில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED : நவ 03, 2024 04:27 AM

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது.
நேற்று காலை கணபதி ஹோமம் துவங்கிய விழாவில் சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சஷ்டி பாராயணம் வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தினமும் காலை 9:30 மணி முதல் சஷ்டி பாராயணம் நடக்கிறது. நவ. 7 மாலை 4:30 மணிக்கு முத்தாலம்மன் திடல் முன்பு சூரசம்ஹாரமும், நவ.8 அன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் திருக்கல்யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் செய்துள்ளனர்.
* அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கந்த சஷ்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
உற்ஸவ மூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானை சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது, முருகன் சாமிக்கு கையில் காப்பு கட்டிய உடன் கந்தர்சஷ்டி விரதம் கடைபிடிக்க பக்தர்கள் கையில் காப்பு கட்டி வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.