/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்தில் காயமடைந்தவர் பலி
/
பட்டாசு விபத்தில் காயமடைந்தவர் பலி
ADDED : பிப் 01, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் பாவாலியைச் சேர்ந்தவர் சின்னராஜா 27. இவர் அதே பகுதியில் செல்வம் என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்தார்.
இந்த வீட்டின் அருகே செல்வம் தகர செட் அமைத்து, அதில் சட்டவிரோதமாக பட்டாசு மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியாமல் இந்த செட் அருகே கம்பியை மிஷின் கொண்டு கட்டிங் செய்த போது வந்த தீப்பொறியால் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சின்னராஜா காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஜன. 30 இரவு 11:40 மணிக்கு சிகிச்சை பலனின்றி பலியானார்.