/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்பாட்டிற்கு வராத குடிநீர் மேல்நிலைத் தொட்டி
/
செயல்பாட்டிற்கு வராத குடிநீர் மேல்நிலைத் தொட்டி
ADDED : ஜன 06, 2025 12:19 AM

சாத்துார்; சாத்துாரில் பணிகள் முடிந்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி செயல்பாட்டிற்கு வராததால் அரசு நிதி வீணாகும் நிலை உள்ளது.
சாத்துார், அருப்புக்கோட்டை, விருதுநகர், நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு தாமிரபரணியை நீர் ஆதாரமாகக் கொண்டு புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதியதாக நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பெறப்படும் குடிநீரை நகரில் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக மெயின் ரோடு எம்.ஏ.சி.எஸ்.நகராட்சி பூங்கா , பைபாஸ் ரோடு சொக்கலிங்கம் பூங்கா மேலும் சாமியார் காலனியில் புதியதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி விநியோகம் செய்யும் போது அனைத்து வீடுகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பைபாஸ் ரோட்டில் சொக்கலிங்கம் பூங்காவில் புதியதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகும் நிலையில் இன்று வரை செயல்பாட்டிற்கு வரவில்லை.
இதனால் அரசின் நிதி வீணாவதோடு மக்களுக்கும் குடிநீர் சரிவர கிடைக்காத நிலை உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாது புதியதாக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியை செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.