விருதுநகர் : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி, வரலாற்றுத்துறை, இந்திய அறிவு அமைப்பு மையம் இணைந்து கல்வெட்டியலின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜூலை 31 முதல் ஆக. 2 வரை கல்வெட்டு பயிற்சி பட்டறை நடத்தியது.
அருங்காட்சியக காப்பாட்சியர் பால்துரை தலைமை வகித்தார். தமிழ் எழுத்துக்களின் தோற்றம், வளர்ச்சி, கல்வெட்டுகளை வாசிக்கும் முறை, தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்த எழுத்துருக்களின் வரிவடிவங்கள், கல்வெட்டில் காலக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விரிவாக விளக்கினார்.
மாணவிகள் கழுகுமலை, வீரசிகாமணி, திருமலாபுரம், சங்கரன்கோவில் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு களப்பயணமாக சென்ற நேரடியாக கல்வெட்டு வாசிப்பு, ஆய்வு பயிற்சி செய்தனர். வரலாற்றுத்துறை தலைவர் பேபிராணி, உதவி பேராசிரியர் தீபா ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள் நட்சத்திர செல்வக்குமாரி, பவானி, சந்திரகலா பங்கேற்றனர்.