/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடியில் நிழற்குடை கட்ட வலியுறுத்தல்
/
இருக்கன்குடியில் நிழற்குடை கட்ட வலியுறுத்தல்
ADDED : ஏப் 28, 2025 05:29 AM
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடியில் பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவிலான மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
கடும் கோடை வெயில் அடித்து வரும் நிலையில் இருக்கன்குடியில் தற்போது சாமியான பந்தல் போட்டு தற்காலிக நிழற்குடை அமைத்து உள்ளனர்.திடீரென வீசும் கடும் சூறாவளி காற்றில் சாமியான பந்தல் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே பயணிகள் நிழற்குடை இருந்த இடத்தில் புதியதாக உறுதியான பயணிகள் நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.