/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வலியுறுத்தல்
/
அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வலியுறுத்தல்
அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வலியுறுத்தல்
அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : அக் 19, 2024 05:28 AM
விருதுநகர் : விருதுநகர் நகராட்சி கவுன்சிலர்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:
ஆக. 21 முதல் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. மீனாம்பிகை பங்களா வழியாக இயக்க மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அக். 16 முதல் அதையும் செயல்படுத்தியுள்ளது மாவட்ட நிர்வாகம். இருப்பினும் பஸ்கள் அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்காமல் வேறு வேறு வழித்தடங்களில் இயங்குகின்றன. இதனால் புது பஸ் ஸ்டாண்ட் முடங்கும் அபாயம் உள்ளது.
மக்கள் புது பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் போது பஸ்கள்வராமல் செல்வது பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டை நுாறு சதவீதம் ஆக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.