/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் 3 மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
/
அருப்புக்கோட்டையில் 3 மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
அருப்புக்கோட்டையில் 3 மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
அருப்புக்கோட்டையில் 3 மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ADDED : டிச 21, 2024 05:19 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதிகளில் 3 மாவட்ட தேர்தல் பார்வையாளர் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் சரியாக உள்ளதா என நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக முழுவதும் சில நாட்களுக்கு முன்பு புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்த முகாம் நடந்தது. முகாமில் முறையாக வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா, பெயர் நீக்கம், திருத்தம் சரியாக உள்ளதா உள்ளிட்டவைகளை நேரில் ஆய்வு செய்ய மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் 3 மாவட்டங்களின் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பார்வையாளர் ஹனீஸ் சாப்ரா அருப்புக்கோட்டை பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி மற்றும் ராஜிவ் நகர், வேலாயுதபுரம், பாலவநத்தம் பகுதிகளில் வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று ஆவணங்களை சரிபார்த்து முறையான விதிகளின்படி பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
புதிய வாக்காளர் பெயர் சேர்த்தலின்போது உரிய ஆவணங்கள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, தாசில்தார் செந்தில்வேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

