/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மினி லாரிகளின் குடிநீர் தரத்தை ஆய்வு செய்வது கட்டாயம்! சுத்தமான வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்
/
மினி லாரிகளின் குடிநீர் தரத்தை ஆய்வு செய்வது கட்டாயம்! சுத்தமான வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்
மினி லாரிகளின் குடிநீர் தரத்தை ஆய்வு செய்வது கட்டாயம்! சுத்தமான வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்
மினி லாரிகளின் குடிநீர் தரத்தை ஆய்வு செய்வது கட்டாயம்! சுத்தமான வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்
ADDED : மே 01, 2024 07:47 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கோடை நெருங்கி வரும் சூழலில் உள்ளாட்சிகளில் குடிநீர் வினியோக இடைவெளி மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் விலைக்கு வாங்கும் மினிலாரி குடிநீரை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றின் தரத்தை ஆய்வு செய்வதும், சுத்தமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் மார்ச் முதலே அனல் காற்றாய் வெப்ப அலை வீசி வருகிறது. இடையே கோடை மழை பெய்தாலும், தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில் அதிகப்படியான குடிநீரை குடிக்கின்றனர். இதனால் மினரல் கேன் குடிநீர் விற்பனையும், மினிலாரி குடிநீர் விற்பனையும் அதிகளவில் நடந்து வருகிறது. ரூ.13 முதல் 15 வரை ஒரு குடத்திற்கு தண்ணீர் தருகின்றனர். கேன் குடிநீர் ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகிறது.
இந்நிலையில் இதில் மினிலாரி குடிநீர் பெறப்படும் முறை, அது சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மினிலாரிகள் அதிகரித்துள்ள நிலையில் போட்டி மனப்பான்மை காரணமாக அதிக தண்ணீரை தொட்டிகளில் தேக்கி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகின்றனர். இவை முற்றிலும் சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
தொற்று பாதித்த குடிநீரை குடிப்பதால் கோடை நேரங்களிலும் டைரீயா போன்ற தீவிர தொற்றுக்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதே போல் கொண்டு வரப்படும் இந்த லாரிகளின் தொட்டிகளும் பல நாட்களாக கழுவாமல் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளும் அதிகளவில் நீரை தேக்கி வைக்கும் பெரிய மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். பொருளாதார சூழலால் விலைக்கு குடிநீர் வாங்க முடியாமல் நகராட்சி, ஊராட்சி குடிநீரை நம்பியிருக்கும் மக்கள் ஏராளம் உள்ளனர். அவர்களின் குடிநீர் சுகாதாரத்தை மேம்படுத்த தொட்டிகளை சுத்தம் செய்வதும் அவசியமாகி உள்ளது. உணவு பாதுகாப்புத்துறையினர் அடிக்கடி ரோந்து சென்று தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.