/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழைய பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்க
/
பழைய பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்க
ADDED : ஆக 01, 2025 01:55 AM
ராஜபாளையம்:ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா, ஒலி பெருக்கி அறிவிப்பு ஏற்படுத்த வேண்டும், என போலீசார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ரூ.3.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.
திறப்பு விழா நடந்து இரண்டு மாதங்கள் கடந்தும் பஸ் ஸ்டாண்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பிற்கு போலீஸ், பஸ் நிறுத்த ஊர் பெயர் எழுதாதது, நேர அட்டவணை என அடிப்படை வசதிகளும் போதிய பாதுகாப்பும் இல்லாமல் பயணிகள் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.
இது தவிர அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு ஏற்கனவே இருந்த தற்காலிக பஸ் ஸ்டாப்பும் செயல்பாட்டில் இருந்ததால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் குறைவாக இருந்து பயணிகளில் முழு அளவு வரவில்லை.
இந்நிலையில் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நகராட்சி கமிஷனர் நாகராஜன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீமான், வடக்கு போலீஸ் எஸ்.ஐ ராஜ்குமார் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பாதுகாப்பிற்காக 15 கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து ஒழுங்குபடுத்தி அறிவிப்பு செய்ய ஒலி பெருக்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

