/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள்; கலெக்டர் நேர்முக உதவியாளர் தகவல்

ADDED : மே 19, 2025 05:25 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இயற்கை, உயிர்ம வேளாண் விளைபொருட்களை பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத்திட்டத்தில் (பி.கே.வி.ஒய்) சந்தைபடுத்த விருப்பம் விவசாயிகள் வேளாண்மை விற்பனை, வணிகத்துறையை அணுகலாம், என கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியாரம்மாள் தெரிவித்தார்.
அவரது செய்திக்குறிப்பு: வேளாண்மைத்துறையின் மூலம் பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தில் 2023-2024ம் ஆண்டில் துவங்கப்பட்ட 18 இயற்கை, உயிர்ம வேளாண்மை விவசாய குழுக்களைச் சேர்ந்த 371 விவசாயிகள் 360 எக்டரில் குதிரைவாலி, கம்பு, பயறு வகைகள், தென்னை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்கின்றனர்.
இத்திட்டத்தில் உள்ள விவசாயிகளின் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யவும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் வேளாண் தொழில் முனைவோருடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 16 தேசிய அங்கச்சான்று பெற்ற விவசாயிகள் காய்கறிகள், மா, கொய்யா, வாழை, தென்னை, சப்போட்டா, மல்லி ஆகியவற்றை பயிர் செய்கின்றனர்.
தென்னை விவசாயிகளுக்கு ஸ்ரீவில்லிப்புத்துார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் சந்தை இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சிறுதானிய இயக்கத்தின் பயனாளிகளான ஆம்பல் அக்ரோ நிறுவனம், தாரகா ஆர்கானிக்ஸ் நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை, உயிர்ம வேளாண் சாகுபடி செய்ய விருப்பம் உள்ளவர்கள் வேளாண்மைத்துறை, விதைச்சான்று, அங்ககத்துறையை அணுகலாம். விளை பொருட்களை சந்தைபடுத்த விருப்பமுள்ளவர்கள் வேளாண்மை விற்பனை, வணிகத்துறையை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.