/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இன்சூரன்ஸ், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
/
இன்சூரன்ஸ், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ADDED : ஜூலை 10, 2025 02:24 AM

விருதுநகர்: தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை திரும்பப் பெறுவது, வங்கி, இன்சூரன்ஸ் துறையில் தேவையான ஊழியர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அந்திய முதலீட்டை தடுப்பது, இன்சூரன்ஸில் பொதுத்துறை நிறுவனங்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர்கள் சார்பில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகரச்செயலாளர் சங்கர் மனோபாலாஜி தலைமை வகித்தார்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கவுரவ ஆலோசகர் மாரிக்கனி பேசினார். எல்.ஐ.சி., காப்பீட்டு கழக ஊழியர் சங்க சிவகாசி கிளை செயலாளர் ராஜேஷ், காப்பீட்டு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பவளவண்ணன் பேசினர்.
காப்பீட்டு கழக முன்னணி தலைவர் உமேஷ் நன்றிக்கூறினார்.
அரசுத்துறையில் உள்ள ஸ்டேட் வங்கியை தவிர்த்து 12 வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை ஆனால் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
வங்கித்துறை நிர்வாகங்களை போல் விருதுநகரில் எல்.ஐ.சி.,யிலும் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.