/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுாரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி
/
கல்லுாரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி
ADDED : ஆக 20, 2025 07:12 AM
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை எஸ். பி.கே., கல்லூரியில் மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி நடந்தது.
போட்டிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார். எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசி முருகன், கல்லூரி தலைவர் மயில் ராஜன் முன்னிலை வகித்தனர். செயலர் சங்கர சேகரன் வரவேற்றார்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்து கொண்ட போட்டிகளில் முடிவில் எஸ்.பி.கே., கல்லூரி மாணவர்கள் முதலிடம் வென்று கோப்பையை பெற்றனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி இரண்டாம் இடத்தை பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சூழல் கோப்பைகளும், சான்றிதழ்களையும் மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மதலை மணிகண்டன் செய்தார். முதல்வர் ராதா நன்றி கூறினார்.

