/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெடுஞ்சாலைத்துறை ரோடு, பாலங்களை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
/
நெடுஞ்சாலைத்துறை ரோடு, பாலங்களை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை ரோடு, பாலங்களை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை ரோடு, பாலங்களை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
ADDED : மே 20, 2025 12:26 AM
நரிக்குடி: திருச்சுழி, கமுதி ரோடு முதல் நடுவப்பச்சேரி வழியாக நத்தக்குளம் வரை 4 கி மீ ., தொலைவிலான கிராம சாலை பணிகள் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நடந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
மாநிலம் முழுதும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக, புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகள், பாலங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்த உள் தணிக்கை குழு அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் திருச்சுழி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு கோட்டத்தில் திருச்சுழி, கமுதி ரோடு முதல் நடுவப்பச்சேரி வழியாக நத்தக்குளம் வரை 4 கி மீ., தொலைவிலான கிராம சாலை பணிகள் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றது.
சேலம் நெடுஞ்சாலை துறை நபார்டு, கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், மதுரை நெடுஞ்சாலைத்துறை நபார்டு கிராமசாலைகள் கோட்ட பொறியாளர் கேசவன், உதவி கோட்ட பொறியாளர் வெற்றிவேல் ராஜன் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் தரம், உறுதித் தன்மை குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.
தார், ஜல்லிகற்களின் மாதிரிகளை சேகரித்து சோதனை கருவிகள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தினர். விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, திருச்சுழி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ் குமார், உதவி பொறியாளர் சுந்தர பாண்டியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.