நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலை வணிகவியல் துறை சார்பில் பசுமை கணக்கியல், வர்த்தகம், நிர்வாகத்தில் நிலைத்தன்மை என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடந்தது. வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். துறை தலைவர் தாமரைச்செல்வி வரவேற்றார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், டீன் கணேசன் வாழ்த்தினர். மலேசிய ஐ.என்.டி.ஐ., பல்கலை இயக்குனர் அசோகன் வாசுதேவன் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். சென்னை இண்டஸ் லான்ட் வங்கி துணைத் தலைவர் உப்பிலி, பேராசிரியர் கார்த்திக், மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் சுப்ரமணியன், பேராசிரியர்கள் பேசினர்.

