ADDED : ஜன 24, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதுகலை, தமிழாய்வு துறை, லண்டன் பிரித்தானியா தளிர் அமைப்பு, முத்தமிழ் மன்றம் சார்பில் பன்னாட்டு அளவிலான படைப்பு பயிலரங்கம் 2024 நடந்தது.
உதவி பேராசிரியர் பத்மப்ரியா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரிய தாய் தலைமை வகித்தார். இலக்கிய விமர்சகர் முருகேச பாண்டியன், அமெரிக்கா ஜார்ஜியா டெக் ஆராய்ச்சி நிறுவனர் ஜெயமாறன், லண்டன் தளிர் தமிழ் பாடசாலை முத்தமிழ் மன்ற தலைவர் திருமகள் பத்மநாபன், இணை பேராசிரியர் பார்த்திபராஜா, உதவி பேராசிரியர் வினோத் பேசினர்.
பல்வேறு கல்லுாரி தமிழ் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் பொன்னி செய்தார்.

