ADDED : அக் 08, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்; ராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உலக முதியோர் தின விழா நடந்தது.
தென்காசி மூத்தோர் நலச்சங்க தலைவர் அழகராஜா தலைமை வகித்தார். ராஜபாளையம் சங்க தலைவர் பெத்துராஜா வரவேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் திலகம் பேசினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. முதியோர் தின உறுதிமொழி வாசிக்கப்பட்டது.சென்னை ஹெல்த் ஏஜ், கடலுார் முதியோர் அமைப்பு, பகிர்வு அறக்கட்டளை, ஈக்விட்டாஸ் வங்கி, கே.எஸ்.ஆர் நிறுவன அமைப்பைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். நகராட்சி ஆதரவற்றோர் விடுதியை சேர்ந்தவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.மூத்தோர் நலம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயலாளர் தேவராஜா நன்றி கூறினார்.