நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி கழகம் சார்பாக மாணவர்களுக்கான நியூ இன்னோவேட்டிவ் ப்ராஜெக்ட்,இன்வோஜன் போட்டிகள், சர்வதேச கருத்தரங்கு துவக்கப்பட்டது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார்.
நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். மலேசியா ஜெகர்தா ஏசியன் இன்டர்நேஷனல் அட்வகேசி ஹெல்த் கேர் இயக்குனர் டாக்டர் உஸ்மான்த் பழனி, மலேசியா சைபர் ஜெயா பல்கலை பயோ மெடிக்கல் பொறியியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் நூர் கமாலியா சஹாரி பேசினர். 150 புதிய கண்டுபிடிப்புகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
19 குழுக்கள் பரிசு பெற்றன.பரிசுத்தொகையாக ரூ. 5, 3, 2 ஆயிரம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

