/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
/
எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
ADDED : அக் 11, 2024 04:47 AM
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா முன்னிலை வகித்தனர். முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் பத்மப்பிரியா வரவேற்றார். தமிழ் துறை தலைவர் பொன்னி கருத்தரங்கம் பற்றி விளக்கினார். தமிழ்நாடு பாடநுால் கழகம் இணை இயக்குனர் சங்கர சரவணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
பேராசிரியர் ஞானசம்பந்தன், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம் தலைவர் ரவிக்குமார், லண்டன் அனாமிகா பண்பாட்டு மைய பேராசிரியர் சுகுமார், முத்தமிழ் மன்ற தலைவர் திருமகள் சிறி பத்மநாதன், தஞ்சாவூர் தமிழ் பல்கலை இணை பேராசிரியர் வீர லட்சுமி, ராஜபாளையம் ராஜுக்கள் கல்லுாரி இணை பேராசிரியர் சிதம்பரநாதன் பேசினர்.
தொடர்ந்து கவிப்பேரரசு ஆய்வுக் கோவை என்ற நுாலை கலெக்டர் வெளியிட கல்லூரி முதல்வர் பெற்றுக் கொண்டார். கல்லுாரி, பல்கலை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் விஜய பிரியா நன்றி கூறினார் .உதவி பேராசிரியர்கள் தனலட்சுமி ,வளர்மதி அன்ன பாக்கியம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.