ADDED : அக் 22, 2025 01:01 AM
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதுகலை தமிழாய்வுத் துறை முத்தரசி கலை இலக்கிய பண்பாட்டுத் தமிழ் ஆய்விதழ் சார்பில் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் பல்துறை சார் நவீன ஆய்வுகள் என்ற தலைப்பில் நடந்தது.
கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா முன்னிலை வகித்தனர். தமிழ் துறை உதவி பேராசிரியர் மீனாட்சி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். கல்லுாரி தமிழ் துறை தலைவர் பொன்னி, திருவனந்தபுரம் பாளையம் பல்கலை கல்லுாரி உதவி பேராசிரியர் ஞானேஸ்வரன் வாழ்த்தினர். மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் தர்மராஜ், காந்தி கிராமிய பல்கலை உதவி பேராசிரியர் சிவா, அமெரிக்கா தமிழ் அநிதத்தின் நிறுவனர் சுகந்தி, இலங்கை கிழக்கு பல்கலை விஞ்ஞானத்துறை தலைவர் பகிரதி இணையவழியில் பேசினர். பல்வேறு கல்லுாரி, பல்கலையை சேர்ந்த 80 ஆய்வாளர்கள் 124 மாணவிகள் பங்களிப்பு செய்தனர். 127 ஆய்வு கட்டுரைகள் 3 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.