/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு ஓரங்களில் கொட்டப்படும் மண்: சகதியில் சிக்கும் வாகனங்கள்
/
ரோடு ஓரங்களில் கொட்டப்படும் மண்: சகதியில் சிக்கும் வாகனங்கள்
ரோடு ஓரங்களில் கொட்டப்படும் மண்: சகதியில் சிக்கும் வாகனங்கள்
ரோடு ஓரங்களில் கொட்டப்படும் மண்: சகதியில் சிக்கும் வாகனங்கள்
ADDED : அக் 22, 2025 01:01 AM

அருப்புக்கோட்டை: ரோடு ஓரங்களில் உள்ள பள்ளங்களை சரி செய்வதற்கு மண்ணை கொட்டுவதால் தற்போது மழையில் சகதியாகி, ஓரங்களில் ஒதுங்கும் வாகனங்கள் சேற்றில் சிக்கி சிரமப்படுகின்றன.
ரோடு ஓரங்களில் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்களை உருவாக்குகிறது. சில சமயங்களில் சாலை விரிவாக்கம், கேபிள்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் செய்கிற போது ரோடு ஓரங்கள், மேடும் பள்ளமுமாக மாறி விடுகிறது. இவற்றை சரி செய்வதற்கு மண்ணைக் கொட்டி சமன் செய்கின்றனர்.
அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச் சாலை செல்கிறது. இதன் ஓரங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய மண்ணை கொட்டி சமன் செய்யப் படுகிறது. இதற்கு சரளை மண்ணை பயன்படுத்துவர். இது நீர் வடிதலுக்கும், வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் பயன்படும். ஆனால், ரோடு அருகில் உள்ள களிமண், செம்மண்ணை தோண்டி எடுத்து ஓரங்களை சமன் செய்வதால் வலுவிழந்தும், மழைக்காலங்களில் சகதியாக மாறி ஓரங்களில் ஒதுங்கும் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.
ரோடு அருகில் எடுக்கப்படும் மண்ணால் அந்த பகுதி பள்ளமாக மாறி அங்கும் தண்ணீர் தேங்கி அவை மீண்டும் ரோடு பகுதியில் வந்து தேங்குவதால் ரோடு சேதமாகி விடுகின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு ஓரங்களுக்கு பயன்படும் மண்ணை கொட்டி சமன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.