/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அக்னிவீர் திட்டத்தில் அதிகளவில் என்.சி.சி., மாணவர்கள் தேர்வு டி.டி.ஜி., கொமடோர் எஸ். ராகவ் பேட்டி
/
அக்னிவீர் திட்டத்தில் அதிகளவில் என்.சி.சி., மாணவர்கள் தேர்வு டி.டி.ஜி., கொமடோர் எஸ். ராகவ் பேட்டி
அக்னிவீர் திட்டத்தில் அதிகளவில் என்.சி.சி., மாணவர்கள் தேர்வு டி.டி.ஜி., கொமடோர் எஸ். ராகவ் பேட்டி
அக்னிவீர் திட்டத்தில் அதிகளவில் என்.சி.சி., மாணவர்கள் தேர்வு டி.டி.ஜி., கொமடோர் எஸ். ராகவ் பேட்டி
ADDED : டிச 04, 2024 12:28 AM

விருதுநகர்:என்.சி.சி.,யில் அளிக்கப்படும் பயிற்சியால் அக்னிவீர் திட்டத்தில் அதிகளவில் என்.சி.சி., மாணவர்கள் தேர்வாகி வருகின்றனர், என விருதுநகரில் என்.சி.சி., இயக்குநரகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் (டி.டி.ஜி.,) கொமடோர் எஸ். ராகவ் தெரிவித்தார்.
விருதுநகரில் உள்ள 28வது என்.சி.சி., பட்டாலியனில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், ராணுவத்தில் இளைஞர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கொமடோர் எஸ். ராகவ் கலந்துரையாடினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளடக்கிய என்.சி.சி., பிரிவில் ஒரு லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு தோழமை, ஒழுக்கம், மதச்சார்பற்ற கண்ணோட்டம், தன்னலமற்ற சேவையை நாட்டுக்கு வழங்குதல் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது.
என்.சி.சி.,யின் குறிக்கோளான ஒற்றுமை, ஒழுக்கம் மாணவர்களுக்கு அணிவகுப்பு பயிற்சியின் போதே வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெற்ற ஊக்கத்தால் பாதுகாப்புப்படை, அக்னிவீர் திட்டத்தில் மாணவர்கள் அதிகமானோர் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு ராணுவ ஆட்கள் சேர்ப்பு, அக்னிவீர் திட்டத்தில் 150 முதல் 200 வரை என்.சி.சி., மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வாகி வருகின்றனர். இந்த எண்ணிக்கை சில நேரங்களில் 400 ஆகவும் உள்ளது.
ராணுவத்திற்கு தேவையான பயிற்சிகள், துப்பாக்கி சுடுதல், கையாளுதல் ஆகியவை வழங்கப்படுவதால் மாணவர்கள் தங்கள் திறமைக்கான துறைகளை தேர்ந்தெடுத்து நாட்டுக்காக பணியாற்றுகின்றனர்.
என்.சி.சி., பிரிவில் மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெறவும், அதிலும் ஊரகப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் இணையவும், அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
பேரழிவுகளின் போது தேசிய, மாநில மீட்புப்படையினருடன் இணைந்து என்.சி.சி., மாணவர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்புகள், கடந்தாண்டு திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளின் போதும் என்.சி.சி., பிரிவினர் சேவையாற்றினர் என்றார்.