/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயிர்ம சான்றுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
உயிர்ம சான்றுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : அக் 17, 2024 04:59 AM
விருதுநகர்: விருதுநகர் விதை சான்று, உயிர்ம சான்று உதவி இயக்குனர் கோகிலா செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அங்ககச் சான்றளிப்பு பெறஇயற்கைவேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண் செயல் திட்டத்தின்படி உயிர்ம சான்று பெற தனி நபராகவோ குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். அங்கக விளை பொருட்களை பயிர்செய்வோரும், வணிகம், ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம்.
உரிய சான்று ஆவணங்களுடன் பதிவுக் கட்டணம் தனிநபர் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2700, தனிநபர் பிற விவசாயிகளுக்கு ரூ.3200, குழுவிற்கு ரூ.7200, வணிக நிறுவனத்திற்குரூ.9400 செலுத்த வேண்டும்.
உயிர்ம சான்று முழுமையாக பெற மாறுதல் காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்தலுக்கு 25 சதவீதம் பதிவுக் கட்டணம், இதர அனைத்து கட்டணங்களையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விருதுநகர் விதைசான்று அலுவலகத்தை அணுகலாம், என்றார்.

