/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற அழைப்பு
/
சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற அழைப்பு
ADDED : மே 29, 2025 11:04 PM
விருதுநகர்:வேளாண் இணை இயக்குனர் விஜயா செய்திக்குறிப்பு:
அரசால் சிறுதானிய சிறப்பு மண்டலம் - 2 ஆக அறிவிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் குறுந்தானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக உழுதல், களையெடுத்தல், பயிர் பாதுகாப்பு, மருந்து தெளித்தல் பறவை விரட்டுதல் ஆகிய உழவியல் செலவினங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1600 வழங்கப்பட உள்ளது.
விதை ஒரு ஏக்கருக்கு 4 கிலோ என அதிகபட்சமாக ஒரு விவசாயியிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு 'மினி கிட்' வீதம் அதிகபட்சம்ரூ.300 மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது.
மாற்றுப்பயிர் சாகுபடிதிட்டத்தின் மூலம் விதைகள், திரவ உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணி, நுண்ணூட்ட உரக்கலவை, அறுவடை மானியம் என ஒரு விவசாயிக்கு அதிகபட்மாக ஒரு ஏக்கருக்கு ரூ.1250 அல்லது 50 சதவீதம் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியுடையவர் ஆவர்.
விவரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம், என்றார்.