ADDED : நவ 21, 2024 04:05 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரவற்ற பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து, அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு இந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு tnwidowwelfare board.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதியலாம். மாவட்ட நிர்வாகம் நவ. 23, 24ல் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
மாவட்டத்தில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், சமூக நலத்துறை பணியாளர்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
இதில் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல் ஆகியவற்றை எடுத்து வந்து தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

