/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி பூஜாரிகள் குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதால் அவதி
/
இருக்கன்குடி பூஜாரிகள் குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதால் அவதி
இருக்கன்குடி பூஜாரிகள் குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதால் அவதி
இருக்கன்குடி பூஜாரிகள் குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதால் அவதி
ADDED : நவ 21, 2025 04:41 AM
சாத்துார்: இருக்கன்குடியில் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் அலுவலர்கள்,பூஜாரிகள் குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இருக்கன் குடியில் அரசரடி காலனிக்கு அருகில் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் அலுவலர்கள் , பூஜாரிகள் குடியிருப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியாகும் கழிவு நீர் முழுவதும் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள செப்டிக் டேங்கில் கடத்தப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியாகும் கழிவு முழுவதும் இந்த செப்டிக் டேங்கில் சேகரிக்கப்பட்டு நவீன முறையில் கம்போஸ்ட் செய்யப்படுகிறது.
காலை மாலை நேரங்களில் செப்டிக் டேங்கில் உள்ள கழிவுகள் மக்கி போவதற்காக இயந்திரம் மூலம் கம்போஸ்ட் செய்வதால் அந்த இயந்திரத்தில் இருந்து அதிக அளவில் துர்நாற்றத்துடன் வாயு வெளிப்பட்டு வருகிறது. இந்த வாயு குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள காலனி பகுதிக்குள் பரவுவதால் காலனி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோயில் பரம்பரை பூஜாரி நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி கூறியதாவது: கோயில் பணியாளர்கள் பூஜாரிகள் குடியிருப்பில் இருந்து வெளியாகும் கழிவு நீரால் துர்நாற்றம் ஏற்படுவதாக புகார் ஏதும் வரவில்லை.தற்போது நீங்கள் கூறி தான் தெரிய வருகிறது. மக்களுக்கு இடையூறு இன்றி கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

