/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்தும் செயல்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்
/
திறந்தும் செயல்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்
திறந்தும் செயல்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்
திறந்தும் செயல்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்
ADDED : நவ 21, 2025 04:42 AM
சாத்துார்: சாத்துார் அருகே நல்லான்செட்டிபட்டியில் அமைச்சர் திறந்து வைத்த பின்னரும் செயல்பாட்டிற்கு வராத புதிய ரேஷன் கடையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நல்லான் செட்டிபட்டி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கூட்டுறவு சொசைட்டி கட்டடத்தில் உள்ள அறை ஒன்றில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் தரைதளம் சேதமடைந்த நிலையில் பல லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. புதிய ரேஷன் கடை கட்டடத்தை கடந்த மாதம் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அமைச்சர் திறந்து வைத்து பல நாட்கள் கடந்தும் புதிய ரேஷன் கடை இன்று வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. பழைய ரேஷன் கடைக்கு சென்று மக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். புதிய ரேஷன் கடை கட்டடத்திற்கு கடையை இடம் மாறுதல் செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

