/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடுக்கு மாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கல்
/
அடுக்கு மாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கல்
அடுக்கு மாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கல்
அடுக்கு மாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜூலை 06, 2025 03:29 AM
ராஜபாளையம்: கட்டி முடித்த வீடுகளுக்கு தடையில்லா சான்று வழங்காததால் குடியேற வழியற்ற நிலை குறித்து தினமல் நாளிதழில் செய்தி வெளியிட்டதன் பலனாக நேற்று முதல் கட்ட பயனாளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 864 வீடுகள் கட்டப்பட்டு ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், நீர் நிலைகளில் குடியிருந்து ஆக்கிரமிப்பு என வீடுகளை இழந்தோர் என பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்டுமானம் தொடங்கி ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின் 45 நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு விழா செய்தார்.
இதில் 100 பயனாளர்களுக்கு முதல் கட்டமாக வீடுகள் ஒப்படைப்பு வழங்கப்பட்டு குடியிருப்பதற்கான அனுமதி வழங்காமல் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது .
இதையடுத்து நேற்று முதல் கட்ட பயனாளிகளை அழைத்து தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சான்றிதழை ஒப்படைத்து மின் இணைப்பு பெற்று குடியேற வழி ஏற்படும். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.