/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளியூர் செல்வோர் தகவல் தெரிவிப்பது அவசியம்; ரோந்தை தீவிரப்படுத்த போலீஸ் எதிர்பார்ப்பு
/
வெளியூர் செல்வோர் தகவல் தெரிவிப்பது அவசியம்; ரோந்தை தீவிரப்படுத்த போலீஸ் எதிர்பார்ப்பு
வெளியூர் செல்வோர் தகவல் தெரிவிப்பது அவசியம்; ரோந்தை தீவிரப்படுத்த போலீஸ் எதிர்பார்ப்பு
வெளியூர் செல்வோர் தகவல் தெரிவிப்பது அவசியம்; ரோந்தை தீவிரப்படுத்த போலீஸ் எதிர்பார்ப்பு
ADDED : மே 19, 2025 05:25 AM

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி, டூவீலர், கொலை, கொள்ளை என நடந்து வருகிறது. போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தாலும் கண்ணில் மண்ணைத் தூவி கொள்ளையர்கள் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
பகலில் நோட்டம் பார்த்து, இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர். வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் போதே வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கும் போது தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மன இறுக்கத்தில் இருக்கும் பலருக்கு, வெளியில் சென்று வந்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்பதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சில ஊர்களில் முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற நேரங்களில் வீடுகளை பூட்டி விட்டு ஆர்வத்தில் செல்கின்றனர். மேலும் கோடை விடுமுறையை கழிக்க பல்வேறு கோடை வாசஸ்தலங்களில் 4, 5 நாட்கள் தங்கி வருகின்றனர்.
இதனை அறிந்து திருடர்கள் பலர் வீடு புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது போன்ற நேரங்களில் குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு, பொதுமக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பது காலத்தின் கட்டாயம். வெளியூருக்கு செல்பவர்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிப்பது நல்லது. போலீசார் 'லாக்டு ஹவுஸ்' என பட்டியலிடப்பட்டு அப்பகுதியில் கூடுதல் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த ஏதுவாக இருக்கும்.
இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பு பணியை செய்வதற்கும் வாய்ப்பாக அமையும். இதன் மூலம் திருட்டு சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது. போலீசாரும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இருப்பினும் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்.