/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மையம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மையம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மையம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மையம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : அக் 03, 2024 04:10 AM
காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மையம் ஏற்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது காரியாபட்டி. சுற்றியுள்ள 150க்கு மேற்பட்ட கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் இங்கு தான் வர வேண்டும். காய்ச்சல், தலைவலி, பிரசவம் என் அனைத்து நோயாளிகளும் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை எடுத்து செல்கின்றனர். மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை, நரிக்குடி சாலை என இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. தற்கொலைகள், வெட்டு, குத்து என அடிக்கடி ஏதாவது நடந்து கொண்டே இருக்கும்.
காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு பரிசோதித்து, உயிரிழந்தவர்களை உடற் கூராய்வுக்கு அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். உறவினர்கள் அங்கும், இங்கும் அலைந்து திரிந்து சிரமப்படுவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு, நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மையம் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் தேவையான இடங்கள் காலியாக உள்ளன. இங்கு உடற்கூராய்வு மையம் ஏற்படுத்தி, தேவையான டாக்டர்கள், பணியாளர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.