/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீரில் உவர்ப்புதன்மை அதிகரிப்பதையும் சிறுநீரக பிரச்னைகளுக்கான வாய்ப்புகளையும் கண்காணிப்பது அவசியம்
/
குடிநீரில் உவர்ப்புதன்மை அதிகரிப்பதையும் சிறுநீரக பிரச்னைகளுக்கான வாய்ப்புகளையும் கண்காணிப்பது அவசியம்
குடிநீரில் உவர்ப்புதன்மை அதிகரிப்பதையும் சிறுநீரக பிரச்னைகளுக்கான வாய்ப்புகளையும் கண்காணிப்பது அவசியம்
குடிநீரில் உவர்ப்புதன்மை அதிகரிப்பதையும் சிறுநீரக பிரச்னைகளுக்கான வாய்ப்புகளையும் கண்காணிப்பது அவசியம்
ADDED : மே 29, 2025 01:44 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தேவையை விட குறைந்த அளவே உள்ளூர் நீராதாரங்கள் உள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரும் குடிநீரை உள்ளூர் நீராதாரங்களோடு கலந்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பல பகுதிகளில் குடிநீரில் உவர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிறுநீரக பிரச்னைகள் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் மாநகராட்சி 1, நகராட்சிகள் 5, பேரூராட்சிகள் 12, ஊராட்சிகள் 450 உள்ளது. கோடைகாலம் என்பதால் பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் வற்றி விட்டது. இதில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருந்தாலும், அதன் சுவை மாற்றத்தில் சிக்கல் இல்லை.
ஆனால் விருதுநகர், சாத்துார், காரியாப்பட்டி, நரிக்குடி, அருப்புக்கோட்டை, சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் குடிநீர் வினியோகம் உவர்ப்பு தன்மையுடன் உள்ளது. இப்பகுதிகளில் தரமான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுவாக டி.டி.எஸ்., அளவு ஒரு லிட்டரில் 300 மி.கிராம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் டி.டி.எஸ்., அளவீடு செய்தால் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிக உவர்ப்பு தன்மையுடைய குடிநீர் வினியோகம். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை இதுவரை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.
காரியாப்பட்டி, நரிக்குடி, சாத்துார், விருதுநகர் பகுதிகளில் சிறுநீரக பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது. அதிகமானோருக்கு சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தாமிரபரணியில் இருந்து கொண்டுவரப்படும் குடிநீர் போதாத காரணத்தால் உள்ளூரில் ஆழ்துளை அமைத்து ஊராட்சிகள் வினியோகம் செய்யும் குடிநீரிலும் உவர்ப்பு தன்மை அதிகமாகவே உள்ளது. மாவட்டத்தில் சிறுநீரக பாதிப்புகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும்.
ஆனால் கள ஆய்வு செய்யாமல் பழைய தகவல்களின் அடிப்படையில் எடுக்கும் நடவடிக்கைகளால் இனி வரும் காலங்களில் சிறுநீரக பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.