/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் மிளகாய் வத்தலுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது அவசியம்; குறையும் விவசாயத்தால் புவிசார் குறியீடு பெற்றும் பலனில்லை
/
சாத்துார் மிளகாய் வத்தலுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது அவசியம்; குறையும் விவசாயத்தால் புவிசார் குறியீடு பெற்றும் பலனில்லை
சாத்துார் மிளகாய் வத்தலுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது அவசியம்; குறையும் விவசாயத்தால் புவிசார் குறியீடு பெற்றும் பலனில்லை
சாத்துார் மிளகாய் வத்தலுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது அவசியம்; குறையும் விவசாயத்தால் புவிசார் குறியீடு பெற்றும் பலனில்லை
UPDATED : ஏப் 26, 2025 08:57 AM
ADDED : ஏப் 26, 2025 05:37 AM

சாத்துார் : சாத்துார் மிளகாய் வத்தலுக்கு மத்திய மாநில அரசுகள் நிரந்தர ஆதார விலையை நிர்ணயிக்காததால் , விவசாய பரப்பு குறைந்து வருவதால் புவிசார் குறியீடு பெற்றும் பலனில்லாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சாத்துார் மிளகாய் வத்தலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது.காரம் சுவை அதிகம் உள்ள மிளகாய் வத்தலை சாத்துார் சுற்று கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்து வந்தனர்.
தற்போது மிளகாய் வத்தலை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்து விவசாயிகள் லாபம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலர் களங்கள்,தார்ப்பாய்கள் , குடோன்கள் அமைக்கப்பட உள்ளது . விருதுநகர் ராமநாதபுரம், சிவகங்கை பகுதி விவசாயிகள் இதன் மூலம் பலன் அடைவார்கள்.
புவிசார் குறியீடு வழங்கியபோதும் மிளகாய் செடியை பராமரித்து வளர்ப்பதற்கு உரிய வேளாண் நுணுக்கங்களை விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் சொல்லித் தருவதில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
புவிசார் குறியீடு வழங்கிய போதும் மத்திய, மாநில அரசுகள் மிளகாய் வத்தலுக்கு நிரந்தர ஆதார விலையை நிர்ணயிக்காமல் உள்ளதால் மிளகாய் பயிரிடும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சாத்தூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட மிளகாய் வத்தல் தற்போது 50 ஏக்கர் பரப்பளவில் பயிர்
செய்யப்படுகிறது.இந்த அளவு மேலும் குறையும் நிலை உள்ளது. காரணம் தற்போது குவிண்டாலுக்கு ரூ7500 விலை நிர்ணயம் செய்யப்பட்டு மிளகாய் வத்தல் விற்பனையாகிறது.
மிளகாய் பறிப்பதற்கு ஏக்கருக்கு கூலியாக மட்டும் ரூ6000 வரை வழங்கப்படும் நிலையில் இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகாததால் மிளகாய்க்கு மாற்றாக கீரை வகைகளை தற்போது பயிர் செய்து வருகின்றனர்.
புவிசார் குறியீடு வழங்கியும் மிளகாய் வத்தல் விளைச்சல் அதிகரிக்காமல் குறைந்து வருவது அரசுக்கு வருவாய் இழப்பாகும்.
என். மேட்டுப் பட்டி விவசாயி தனுஷ்கோடி ராஜ் கூறியதாவது: சாத்துாரில் 100 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட மிளகாய் வத்தல் தற்போது 50 ஏக்கர் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது.குவிண்டாலுக்கு ரூ.30,000 என மத்திய மாநில அரசுகள் விலை நிர்ணயித்தால் மட்டுமே மிளகாய் வத்தல் விவசாயம் செழிக்கும்.புவிசார் குறியீடு வழங்கிவிட்டு விளைச்சல் குறைந்தால் அதனால் யாருக்கு என்ன லாபம். என்றார்.